கட்டற்ற காட்டாற்றின் ஓசை நாகரீகக் குவளைகளுக்குள் கேட்பதில்லை.
ஊற்றாய் பொங்கி வான் நனைக்கும் தண்ணீரின் சத்தம் குழாய்க் கசிவுகளில் கேட்பதில்லை.
அருவியாய் விழுந்து கடும் பாறையைக் கரைக்கும் நீரின் நாதம் நகர எல்லைகளுக்குள் ஒலிப்பதேயில்லை.
நானே அறியாதபடி என் மனம் இதற்கு ஏங்கிக்கொண்டே இருக்கிறது.
கலாச்சாரக் குப்பிகளுக்குள் அடங்கிடாத குழந்தைகளின் கூச்சல் கேட்கும்போது, என்னையும் மீறி மனம் விம்முகிறது.
அரண்மனை இடுக்குகளில் வளரும் அரசமரம் போல, நாகரீக நெரிசலுக்கிடை பொங்கும் காட்டூற்றுகள்…
— அயலவன்